Saturday, August 29, 2009

கேள்விகள்

மின்னளொளி கீற்றுக்கு
உன் விடைதானென்ன?
விழிகள் தொடுக்கும் கணைகளா அல்ல‌
இதழ்களில் தெறிக்கும் புன்சிரிப்பா?
பெளர்ணமி நிலவுக்கு
உன் விடைதானென்ன?
உன் வட்ட வதனமா அல்ல‌
அதன‌ழகில் வீசும் ஒளியா?
நீ வரும்பொதெல்லாம் ரசிகனாகின்றேன்!
நீ சென்றபிறகு கவிஞனாகின்றேன்!

Saturday, August 22, 2009

நிலவின் ஆற்றாமை!

அழ‌கின் உட்ச‌மாய் க‌ட‌வுள் ப‌டைத்த‌து நீயே என்றேன்!
பெள‌ர்ண‌மி நில‌வைப் பார்த்த‌தில்லையோ என்றாய்?

உன்னுட‌ன் எத‌ற்கு விவாத‌ம்…
ந‌ம் முற்ற‌த்திலே போய் பார்ப்போம் என்றேன்!

உன் வ‌ன‌ப்பை க‌ண்ட‌ வெண்ணிலவோ
வெட்க‌ம் தாளாம‌ல் மேக‌ம் என்னும்
திரையின் பின்னே ஒளிந்துகொண்டாள்!

கிழக்குக் கடற்க்கரைச் சாலை

கிழக்குக் கடற்க்கரைச் சாலையிலே
எங்கும் இருக்கிறது அழகு!

உன்னை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன்
போகும் வழியெல்லாம் அழகு!

தங்கத்துகள் போன்ற மணற்பரப்பு பொன்னழகு
வெண்ணுரை உமிழும் நீலலைகள் வண்ணழகு

வான்னிலா எழும் நேரம்…
உன் கண்களின் காந்த‌த்தால்
என்னைத் ஈர்த்து இழுத்தாய்!

அப்போது தான் அறிந்தேன்..
நீயே இயற்கையை விஞ்சிய அழகு!

கள்ளி

நீயொரு கள்ளி!!
முத்தத்தை தந்துவிட்டு
இதயத்தை அல்லவா திருடிவிட்டாய்?

தேய்ப்பிறை

நாளுக்கு நாள் நீ தேய்வதேனோ வெண்ணிலவே?
என்னவளைப் போல் வசீகரமில்லை என்ற வருத்தமோ?

கைப்பேசி

என் காதலைச் சேர்த்த கைப்பேசியே!
உன்னைப் படைத்தவனை நான் வாழ்த்துவேன்!

ஆட்சி இல்லா இந்த நளனுக்கு
அன்னப் பட்சியாய் தூது போனாய்!

நண்பர்களோடு அரட்டையில் இருந்தபோதும்
ஒரு மணி அடித்து என்னை தனியொரு
உலகிற்கு அழைத்துச் சென்றாய்!

ஊடல் கொள்ளவும் உதவினாய்!
அது கடந்து கூடலின் இன்பமும் காட்டினாய்!

நீ காமபானத்தின் பரிமான வளர்ச்சியோ?
SMS காதல் இலக்கணத்தின் மறுமலர்ச்சியோ?

கள்ளக் காதல்

நான் வாங்கித் தந்த ரோஜா…
பத்திரமாய் இருக்கிறது உன் கைப்பையில்!

நானோ ப்ரமச்சாரி
நீயோ கன்னிப்பெண்
இன்னமும் ஏன் இந்தக் கள்ளக் காதல் ?

த‌லைப்பு எதற்கு?

அன்பை உண‌ர்த்த மொழி எதற்கு?
மௌனம் ஒன்றே போதுமே!
உன் காதலைச் சொல்ல வாக்கியம் எதற்கு?
ஓரவிழிப்பார்வை ஒன்றே போதுமே!

த‌லைப்பு எதற்கு?
காதல் க‌விதை ம‌ட்டும் போதுமே!

Think global! Act Local!

Sometimes the so called “poet” in me comes out of his hibernation and starts poring his thoughts, compelling me to squeeze some time between my hectic schedules and start blogging :)

Why have i named the title as such may become apparant after reading this completely. If not the mistake of not expressing myself clearly falls on me ;)

Drop me a comment & i shall fix those bugs :)

So here I have put down some thoughts on what would happen if a tamil lover [ for the moment we can keep it ambigious as whether he is a person who loves tamil or a tamilian who is in love ! :) ] falls in love with someone who doesnt understand tamil.

காதல் சொல்ல வந்தேன்

இதயத்திலே ஒரு இடம் ஒதுக்கியிருந்தேன்
அது உனக்கு மட்டும் என்று தனித்திருந்தேன்

உன் நினைவில் காலத்தை கழித்திருந்தேன்
நாம் சேர்ந்து ரசிக்க பாக்கள் பல சேர்த்திருந்தேன்
கவிஞனாகி ஹைக்கூ சிலவும் கிறுக்கியிருந்தேன்

யுகங்கள் கடந்து உன்னைச் சந்த்தித்தேன்
பிறவிப் பயனை அடைந்தது போல் பூரித்தேன்!

ஆவலோடு என் காதல் சொல்ல வந்தேன்…
”Hi,this bus goes to Velachery??”என்றாய்

தமிழறியாத உன்னை எப்படி காதலிப்பேன்?
அமிழ்தான தமிழன்றி வேறு எம்மொழியில்
என் காதலைச் சொல்லிடுவேன்?

Next stage - butchering of English :)

They say love doesnt need a language
Still I wouldnt risk my chances.
Give me a minute
While I get the apt words
To confess my love for you
In a sweet lovely sonnet!

Now comes the butchering of ஹிந்தி :)

mera dil bhi kitna paagal hai…

yeh pyar to thumse kartha hai

par saamne jab tum aathey ho

kuch bhi kehne se dartha hai

Maine sirf shayari to churaya hai

Maana ki yeh chotti si gunah hai

Saari duniya hai pyar mein

Hum tumhe chaahen tho kya gunah hai??